left Basic Electrical in மின்னியல் தமிழில்...!: உண்மையிலயே மின்சாரம்னா என்ன?

Sunday, August 05, 2007

உண்மையிலயே மின்சாரம்னா என்ன?


ஓகே, ஓகே. உன்னோட வரையரைகள்(definitions) எல்லாம் போதும் சாமி. ஒழுங்கா குழப்பாம பதில சொல்லுடா வெண்ணை, இந்தஒரே கேள்வியக் கேட்டே இன்னும் எத்தன குழப்பம் பண்ணலாம்னு ஐடியானு நீங்க கேட்கிறது தெரியுது.சரி சரி பில்டப் எல்லாம் போதும் விசயத்துக்கு வருகிறேன்.

இதோ எளிமையான பதில் இரண்டு முக்கியமானவை ஒரு கடத்தியின்(conductor) வழியே பாயும்.
அவை,
1.மின்னூட்டம் (eletric charge)
2.மின் சக்தி(Electrical Energy)

இதனுடன் சேர்ந்து வேறு சிலவும் கடத்தியில் பாயும், இப்பொதைக்கு எளிமையாக்க அதையேல்லாம் தவிர்த்து விடுவோம்.இரண்டு பொருள்கள் கடத்தியில் ஓடுகின்றது, இரண்டையுமே நாம் மின்சாரம் என அழைக்க முடியாது. இதயே காரணம் காட்டி அப்ப மின்சாரம்னா என்ன? அப்படினும் கேட்க கூடாது. அதற்க்கு பதிலாக

1. எந்த பொருள் பல்பி(bulb)னுள் கடத்தி வழியாகச் சென்று மீண்டும் வெளியே வருகிறது?

2. எந்த பொருள் பல்பினுள் சென்று ஒளி(light)யாக மாறுகிறது?

முதல் கேள்விக்கு பதில் #1 மின்னூட்டம் (Electric Charge).

மின்னூட்டம் என்பது பல்பின் வழியாக மின்சுற்றில்(circuit) பாயும் ஒரு பொருள். பொதுவாக இந்த செயலின் போது ஒரு மின் சுற்றில் மின்னுட்டம் இழப்பதுமில்லை, அதெ போல் மின்னுட்டம் பெறப்படுவதும் இல்லை. மேலும் மின்னூட்டம் மிக மெதுவாகப் பாயும், இன்னமும் சில நேரங்களில் கடத்தியில் ஓடாமல் ஒரே இடத்தில் இருக்கும். மாறுதிசை மின்னோட்ட மின்சுற்றில் மின்னூட்டம் முன்னோக்கி பாயாது. கடத்தியினுள் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருக்கும்.

இரண்டாவது கேள்விக்கு பதில் # மின்சக்தி (Electric energy)

இதயே மின் காந்த சக்தி எனவும் அழைக்கலாம்.(Electro magnetic energy). இந்த சக்தியானது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பாயும். மிக வேகமாகச் செல்லக் கூடியது. சற்றேரக்குறைய ஒளியின் வேகத்தில் செல்லும். இதை ஒரு மின்சுற்றிலிருந்து ஆக்கவும் முடியும், இல்லை வேறு வடிவில் தொலைக்கவும் முடியும். அதாவது மின்விளக்கு கொண்ட மின் சுற்றில்(Circuit) மின்சக்த்தியானது ஒளி மற்றும் வெப்பமாக மாற்றப் படுகிறது.

மேலே சொல்லப்பட்ட இரண்டுக்குமான வித்தியாசம்

மின்னூட்டம்(Electric charge)---------------------------------------------------------மின்சக்தி(Electro magnetic energy)

1)மிக மெதுவாகச் செல்லும். சில நேரங்களில் நின்று விடும் ------- எப்பொழுதும் வேகமாகச் செல்லும், ஒளியின் வேகத்திற்க்கு நிகராக.

2)இதன் ஓட்டம் மின்னோடாம்(electric current) எனப்படும்.ஆம்பியர்(Ampere) என்னும் அலகால்(Unit) அளக்கப் படுகிறது. -------
இதன் ஓட்டம் மின்சத்தி எனப்படுகிறது. வாட்(Watt) என்னும் அலகால் அளக்கப்படுகிறது

3)பல்பின் வழியாகப் பாய்ந்து செல்வது -------
பல்பினால் உபயொகப்படுத்தப் படுகிறது(அதாவாது ஒளியாக மாற்றப் படுகிறது.)

4)ஆடலோட்ட(AC) மின் சுற்றில் முன்னும் பின்னுமாக ஓடும். .-------ஆடலோட்ட(AC) மின் சுற்றில் தொடர்ந்து முன்னோக்கி பாயும்.

5)உலோகங்களில் இருந்து பெறப்படுகிறது. ---------
மின் இயற்றி(Generators), மின் கலம்(Battery)இவற்றிலிருந்து பெறப்படுகிறது.

6)இது ஒரு பொருளின் அடிப்படைத்துகள் ---------
இது ஒரு வகையான ஆற்றல்.

7)அடிப்படை துகள் எலக்ட்ரான்களும், புரோட்டான்களும். --------
இதன் அடிப்படை போட்டான்கள்(Photons) ஆகும்.

8)கடத்தியின் உள்ளே பாய்ந்து செல்வது -------
கடத்தியினைச் சுற்றியுள்ள வெளியில் பயனம் செய்வது.

9)சுழல் ஓட்டம்(Circular flow)ஒரு மின்சுற்றில் சுற்றிச் சுற்றி வரும் - --------
ஒரு முனை ஓட்டம்(one way flow)மின் மூலத்திலிருந்து(source) மின்சுமை(Load) நோக்கி பாயும்.

10) இயற்கையாகவே இருப்பது ---------
மின்சாரக் கம்பெனிகளால் உருவாக்கி விற்கப் படுவது.

11) பழைய விஞ்ஞானிகள் இதை மின்சாரம்(Electricity) என்றார்கள். ----------
புதிய முதலாலிகள இதை மின்சாரம் என்கிறார்கள்

10 Comments:

Anonymous said...

// உன்னோட வரையரைகள்(definitions) எல்லாம் போதும் சாமி. ஒழுங்கா குழப்பாம பதில சொல்லுடா வெண்ணை, இந்தஒரே கேள்வியக் கேட்டே இன்னும் எத்தன குழப்பம் பண்ணலாம்னு ஐடியானு நீங்க கேட்கிறது தெரியுது.சரி சரி பில்டப் எல்லாம் போதும் விசயத்துக்கு வருகிறேன்.//

எப்படி விஜி? என் மனசில இருக்கிறத அப்டியே சொல்றிங்க?;)
கிகிக்

Anonymous said...

Reminds me of my electronics units in uni..
good post

said...

//எப்படி விஜி? என் மனசில இருக்கிறத அப்டியே சொல்றிங்க?;)
கிகிக் //

கி கி :)


//தூயா [Thooya] said...
Reminds me of my electronics units in uni..
good post//

Thanks

said...

கட்டுரையை தொடரலையா?

said...

//Sathia said...
கட்டுரையை தொடரலையா?//

வருகைக்கு நன்றி சத்யா, கொஞசமா வேலை. விரைவில் தொடர்கிரேன்.

said...

வெரிகுட் !!!!!!!!!!!

விக்கிபீடியால போடுங்க !!

said...

வணக்கம் திரு.விஜி.
தங்களுடைய தமிழில் மின்னியல் குறித்த முயற்சிக்கு எனது ஆதரவுகளும் வாழ்த்துக்களும்.

தங்களுடைய தொழில்நுட்பப் புரிதலில் தவறுகள் கூறும் அளவிற்கு மின்னியலில் பரிச்சயம் இல்லாவிடினும் தமிழ் சொற்கள் சிலவற்றை முரணாகப் பயன்படுத்தியுள்ளீர்கள்.

1. மின்னூட்டம் என்பது electric charge என்று குறிப்பிட்டுறுக்கிறீர்கள்.

electric charge - மின்சுமை
electrically charged - மின்னூட்டம்பெற்ற
charging - மின்னூட்டுதல்
Electrical Energy - மின் ஆற்றல் (சக்தியல்ல)(same for மின்காந்த ஆற்றல்)
current - மின்னோட்டம்
electric potential - மின்னழுத்தம்


உதாரணமாக :

A Current observed due to the flow of charge passes through the electrical-conductor and charges the tip of the electrodes and gives rise to a corresponding electric potential.

ஒரு மின்கடத்தியில் மின்சுமையின் இயக்கங்களினால் பாயும் மின்னோட்டம் அக்கடத்தியின் வழியே மின்முனையை மின்னூட்டமடையச் செய்து, அப்புள்ளியில் ஒரு மின்னழுத்தத்தை உருவாக்கும்.

மீண்டும் தெளிவு படுத்திவிடுகிறேன் உங்கள் புரிதலில் உள்ள குறைகளல்ல நான் குறிப்பிட்டிருப்பது உங்கள் தமிழாக்கத்திலுள்ள தவறுகள்.

தொடருங்கள் வாழ்த்துக்கள்..

said...

//செந்தழல் ரவி said...
வெரிகுட் !!!!!!!!!!!

விக்கிபீடியால போடுங்க !!//

நன்றி ரவி. தமிழ்படுதியதில் சில சொற்கள் சரி படுத்த வேண்டியுள்ளது. பிறகு விக்கிபீயால இனைக்கிரேன்.

said...

// கையேடு said...
வணக்கம் திரு.விஜி.
தங்களுடைய தமிழில் மின்னியல் குறித்த முயற்சிக்கு எனது ஆதரவுகளும் வாழ்த்துக்களும்....//

மிக்க நன்றி உங்கள் வருகை, வாழ்த்து மற்றும் ஆலோசனைகளுக்கு.

said...

அன்பு விஜி!
நல்ல முயற்சி.
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

ஒரு அணுவிலிருக்கும் எலக்ட்ரான், ப்ரோட்டான்களின் அசைவே மின்சாரம் எனச் சொல்லி இருந்தால் இன்னும் எளிமையாக இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது.

நிஜமாகவே கொஞ்சம் குழப்பித்தான் விட்டீர்கள்.

:-)

முயற்சி தொடரட்டும்.

ஏனெனில் இது போன்ற தொழில் நுட்பம் குறித்த வலைப்பூக்கள் அதுவும் தமிழில், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பற்றி வருவது மிகக் குறைவு.

இப்படி ஒரு நல்ல முயற்சிக்காக பிடியுங்கள் பூங்கொத்தை.

மீண்டும் வாழ்த்துக்கள்.


.