left Basic Electrical in மின்னியல் தமிழில்...!: 4 மின்சாரம் என்பது....??!!!

Thursday, May 31, 2007

4 மின்சாரம் என்பது....??!!!


மின்சாரம் பற்றி ஒரு சரியான வறையரையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழே சொல்லப்பட்ட எதை எடுத்துகொள்வது?. சரி நன்று, நாம் மேலே உள்ள ஒன்றைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என அவசியம் இல்லை. ஒருவேளை முரண்பாடுகளே வேண்டாம், மேலே சொல்லப்பட்ட எல்லாம் சரி என நடிப்பதை விட்டுவிட்டு சரியான புரிதல் வேண்டுமேனில் கீழே உள்ளதை எளிமையான விளக்கமாகக் எடுத்துக் கொள்ளுங்கள். மின்சாரம் எனபது புதிரான ஒரு விசயம். அது ஒரெ நேரத்தில் கண்ணுக்கு தெரியாத மற்றும் தெரியும் பொருள். மேலும் அது துகள் மற்றும் ஆற்றல். அது குறந்த புரோட்டான்களால் உருவாக்கப்பட்ட அலைவரிசை கொண்ட ரேடியோ அலை. அது ஒரு மர்மமான வெளிர்நீல நிற நெருப்பு ஆனாலும் கண்ணால் பார்க்க முடியாது. அது முன்னொக்கி ஒளியின் வேகத்தில் நகரும்... ஆனாலும் AC கடத்தியில் முன்னோக்கிச் ஓடாமல் முன்னும் இன்னும் அலைவுறும். அதற்கு மொத்தமாக எடையில்லை ஆனாலும் கொஞ்சமா கனமா இருக்கும். அது குண்டு பல்பு வழியே செல்லும் போது சிறிதளவு மின்சாரம் கூட அந்த பல்பினால் பயன்படுதப்ப்டுவதில்லை, பல்பினுள் ஒரு முனையில் எவ்வளவு உள்ளே சென்றதோ அது அடுத்த முனையில் வெளிவந்த்து விடும் ஆனாலும் பல்பிலிருந்து வெளிச்சம் வரும் ஆனாலும் சிறிதளவேனும் மின்சாரம் அந்த பல்பினால் பயன்ப்டுத்தப்படவில்லை. பாடப்புத்தகங்களில் எல்லாம் மின்சாரம் பற்றி உள்ளது. ஆனால் மின்னுட்டம் பற்றி இல்லை. மின்சாரம் என்பது பல அடிப்ப்டைத்தத்துவங்களைக் கொண்டது அதை மின்கலன்களில் சேமித்து வைக்கலாம். நீங்கள் அதை அளக்க விரும்பினால், எந்த அலகு(unit) பயன்ப்டுத்த வேண்டும்? ஏன் ஓல்ட்(volt)ல் அளக்கவேண்டும்? அதுமட்டுமா கூலூம்(coulomb), ஆம்பியர் (Ampere), வாட்(Watt), ஜூல்(Joules) இதேல்லாம் இருக்கே? எல்லமே ஒன்றா?. மின்சார்ரம் என்பது சில அடிப்படைத்தத்துவங்ளின் மொத்தமே( class of Phennomena); இருந்தாலும் மொத்ததில் அது ஒரு நிகழ்வே. ஒரு நிகச்சியை எப்படி நம்மால் அளக்க முடியாதோ, உன்மையிலே மின்சாரத்தின் அளவை அளக்க முடியாது. .சரியா? ஹி... ஹீ... மேலே நான் தந்த விளக்கம் முட்டாள்தனமாக இல்லை?. மின்சாரம் அப்படினு ஓரு வார்த்தய வேச்சுகிட்டு இப்படி குழப்பம் பன்றயே ராசா? ஏதோ எங்களுக்கு புரிஞ்சதயும் நல்லா குழப்பி விட்டுருவ போலிருக்கே போதும்டா சாமி ஆள் விடு அப்படினு சொல்ல தோனுதா? பொறுமை. அடிக்க வராதீங்க. மின்சாரம் அப்படிங்கற வார்த்தைக்கு முரனான விளக்கங்கள் என்னேல்லாம் உள்ளது என சொல்லவே, மேலும் ஒரே வார்த்தைக்கு பல வரையறைகளை ஒப்புக்கொண்டால் வரும் குழப்பங்களை விளக்கவே மேலே சொல்லப்பட்டவை. அப்ப சரியானது எது?

11 Comments:

said...

என்ன ராசா? இப்படி குழப்பத்தான் இத்தனை நாள் விடுப்பு எடுத்து இப்ப வந்திருக்கீங்க?
:-))

said...

//வடுவூர் குமார் said...
என்ன ராசா? இப்படி குழப்பத்தான் இத்தனை நாள் விடுப்பு எடுத்து இப்ப வந்திருக்கீங்க?
:-)) //

சீக்கிரமா குழப்பத்தை போக்கிடலாம் சார். அதற்காகத்தான் இந்த தொடரே. தொடர்ந்து வருகை தாருங்கள் நன்றி.

said...

மின்னியல் பற்றிய இன்னும் பல புதிய விவரங்களைத் தெரிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள். அடுத்து வர இருக்கும் பதிவுகளுக்குக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

said...

//பாலராஜன்கீதா said...
மின்னியல் பற்றிய இன்னும் பல புதிய விவரங்களைத் தெரிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள். அடுத்து வர இருக்கும் பதிவுகளுக்குக் காத்துக்கொண்டிருக்கிறேன்//

நன்றி.

said...

தற்செயலாக உங்கள் பதிவுக்கு வந்துவிட்டேன், உள்ளே வந்தால்
தலை சுற்றுகிறது...

படிக்கின்ற காலக்கட்டத்தில் மின்சாரத்தை பற்றிய பாடபுத்தக வரையறைகள் எனக்கு கொஞ்சம் முரணாகவே பட்டது. கேள்விகேட்டாலும் யாரும் சரியா விளக்கமாட்டார்கள். அடியெல்லாம் வாங்கியிருக்கிறேன்.

இதை வாசித்ததும் இருந்ததும் சுத்தமாக குழம்பிவிட்டது....

தொடர்ந்த பதிவுகளில் விளக்குவீர்கள் என்று ஆவலுடன்...

said...

//பாரி.அரசு said...
தற்செயலாக உங்கள் பதிவுக்கு வந்துவிட்டேன், உள்ளே வந்தால்
தலை சுற்றுகிறது...

படிக்கின்ற காலக்கட்டத்தில் மின்சாரத்தை பற்றிய பாடபுத்தக வரையறைகள் எனக்கு கொஞ்சம் முரணாகவே பட்டது. கேள்விகேட்டாலும் யாரும் சரியா விளக்கமாட்டார்கள். அடியெல்லாம் வாங்கியிருக்கிறேன்.

இதை வாசித்ததும் இருந்ததும் சுத்தமாக குழம்பிவிட்டது....

தொடர்ந்த பதிவுகளில் விளக்குவீர்கள் என்று ஆவலுடன்... //


தங்கள் வருகைக்கு நன்றி பாரி .அரசு

மின்சாரம் பற்றிய குழப்பங்களை போக்கவே இந்தப் பதிவு.


http://electricalintamil.blogspot.com/2007/08/blog-post.html

http://electricalintamil.blogspot.com/2007/06/blog-post.html

இவைகளையும் பாருங்கள் நண்பரே.

said...

மின்சாரம் மாதிரி அடிச்சு ஆடுங்க!வாழ்த்துக்கள்.

Anonymous said...

Plz give the fundamentals of
electricity in easy terms
thanks expecting more and more
sridhar

said...

//Plz give the fundamentals of
electricity in easy terms
thanks expecting more and more
sridhar//

நன்றி sridhar. இன்னும் எளிமையாக தர முயர்ச்சிகிரேன்.

said...

மூலைக்கு மூலை தமிழ், தமிழ்னு கூச்சல்போட்டு என்ன செய்ய? தமிழில் அறிவியல் விஷயங்கள் சொற்பமாகவே இருக்கிறது. உங்களைப்போன்றோர் மனது வைத்தால்தான் தமிழுக்கு வளம் சேர்க்க முடியும். தொடரட்டும் உங்கள் பணி. ஒரு மொழியின் ஆயுள் அது தன்னகத்தே எவ்வளவு தகவல்களை வைத்திருக்கிறது என்பதைப்பொறுத்தே அமையும்.

said...

மூலைக்கு மூலை தமிழ், தமிழ்னு கூச்சல்போட்டு என்ன செய்ய? தமிழில் அறிவியல் விஷயங்கள் சொற்பமாகவே இருக்கிறது. உங்களைப்போன்றோர் மனது வைத்தால்தான் தமிழுக்கு வளம் சேர்க்க முடியும். தொடரட்டும் உங்கள் பணி. ஒரு மொழியின் ஆயுள் அது தன்னகத்தே எவ்வளவு தகவல்களை வைத்திருக்கிறது என்பதைப்பொறுத்தே அமையும்.