left Basic Electrical in மின்னியல் தமிழில்...!: மின்சாரம் என்பது,,,,,

Wednesday, March 07, 2007

மின்சாரம் என்பது,,,,,


1. விஞ்ஞானிகளைப் பொறுத்த வரை மின்சாரம் என்றால் ஒன்றே ஒன்றுதான்: எலக்ட்ரான்கள் என்னும் எதிர்மின் துகள்(negative charge) புரோட்டான்கள் என்னும் நேர்மின் துகள்(positve charge), அதவது மொத்தத்தில் மின்னூட்டங்கள்(Charges)

எ.கா:- மின்னோட்டம், மின்னோடத்தின் அளவு, எத்தனை கூலூம் மின்னூட்டம் ...

2.தினசரி வாழ்ழ்க்கையில் மின்சாரம் என்றால்: மின்கலத்தில் இருந்தும், மின் இயற்றியில் இருந்தும் அனுப்பப்படும் மின்காந்தபுல ஆற்றல்(electro magnetic field energy) .

எ.கா: மின்சார கட்டணம், kwh (கிலொ வாட் ஹவர்) மின்சாரம் (அதாவது ஒரு யூனிட் மின்சாரம்)

3. பள்ளி மாணவர்களுக்கு: மின்சாரம் என்பது எலக்ட்ரான்களின் ஒட்டம்.

எ.கா: மின்னோட்டம், ஆம்பியர்...

4. மின்சாரம் என்பது எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்களுக்கு இடையில் மொத்த அளவில் உள்ள வேறுபாடு(amount of inbalance) .

எ.கா: நிலை மின்னூடம், மின்ன்னூட்டங்களை அகற்றுதல்(charge discharge)

5.மின்சாரம் என்பது வேறொன்றும் இல்லை மொத்தமாக மின்னூட்டங்களை அடிப்படையாக கொண்ட தத்துவங்கள்

எ.கா

உயிர்மின்னியல்(bio electricity),

பீசோ மின்னியல்(Pizo electricity),

வெப்ப மின்னியல்(thermo electricity),

வளிமண்டலத்தோடு தொடர்புள்ள

மின்னியல்(atmospheric electricity)...Etc..

6. மற்றும் சில பொதுவான வரையறைகள்

"மின்சாரம்" என்பது மின் ஆற்றல் பாய்வதைக் குறிப்பது(electric power, watts),

"மின்சாரம் " என்பது மின் அழுத்த வேறுபாடால் (potential diffrence)

உண்டாவது

"மின்சாரம்" என்பது வேறொன்றும் இல்லை அறிவியலின் ஒரு பிரிவு.


மேலே சொன்னது எல்லாம் மின்சாரத்தை பத்தி நமக்கு சொல்லப்பட்டவை, அல்லது நாம் படித்தவை. இதில் எது சரி? எந்த ஒரு வரையறைய நாம் எடுத்துக்கொள்வது? இல்லை எல்லாமே சரியானதா?

5 Comments:

said...

தமிழ் விக்கிபீடியாவிலும் மின்னியல், இலத்திரனியல் பற்றிய அடிப்படைத் தகவல்களை தொகுக்க முயல்கின்றோம். இங்கு இடும் இடுகைகளின் சாரம்சத்தை த.வி சேர்த்தாலும் நன்று.

http://ta.wikipedia.org/wiki/இலத்திரனியல் நுட்பியல் சொற்கள்

த.வி உங்களின் பங்களிப்பை நல்கினாலும் நன்று.

அத்தோடு சங்கமம் வெற்றிக்கு வாழ்த்துக்கள். தமிழர் பற்றிய தகவல்களையும் த.வி வில் சிறப்பாக சேர்த்து வருகின்றோம்.

பார்க்க:
http://ta.wikipedia.org/wiki/WP:Tamils

நன்றி.

said...

//நற்கீரன் said...
தமிழ் விக்கிபீடியாவிலும் மின்னியல், இலத்திரனியல் பற்றிய அடிப்படைத் தகவல்களை தொகுக்க முயல்கின்றோம். இங்கு இடும் இடுகைகளின் சாரம்சத்தை த.வி சேர்த்தாலும் நன்று. ...//

நன்றி நற்கீரன். எனது இடுகைகளை தமிழ் விக்கிபீடியாவிலும்
கண்டிப்பாக சேர்க்கிறேன். அதில் அறிவியல் கட்டுரைகள் எழுத ஏற்கனவே பதிவு செய்து விட்டேன். இதுவரை எழுதியவகளை தொகுத்து மிகவிரைவில் அதில் சேர்க்கிறேன்.

said...

நல்ல முயற்சி. நல்ல பதிவு.

முடிந்தால் ஒவ்வொரு பதிவுன் கடைசியிலும் இதற்கு முந்தைய பதிவுகளின் லிங்குகளை போட்டுவிடவும்.

அப்புறம், A picture speaks 1000 words.

said...

//சீனு said...
நல்ல முயற்சி. நல்ல பதிவு.

முடிந்தால் ஒவ்வொரு பதிவுன் கடைசியிலும் இதற்கு முந்தைய பதிவுகளின் லிங்குகளை போட்டுவிடவும்//

நன்றி சீனு. இனிமேல் லிங்க்குகலை சரியாக போட்டு விடுகிறேன். நிரைய படங்களையும் சேர்க்கிறேன். தொடர்ந்து வாருங்கள், தவறுகளை சுட்டிக்காட்டுங்கள், உங்கள் அலேசனைகளையும் சொல்லுங்கள்.

said...

நான் இன்றுதான் உங்கள் பதிவிற்கு வந்தேன். மிகவும் நல்ல முயற்சி. ஏன் 2007க்கு அப்புறம் புதிய பதிவுகள் ஒன்றும் இல்லை.. தயவு செய்து அப்டேட் செய்யவும்.

பொறுமையாக படித்துவிட்டு வருகிறேன்..