left Basic Electrical in மின்னியல் தமிழில்...!: மின் இயற்றி( generator) மின்சாரத்தை உருவாக்குகிற்தா?

Tuesday, March 06, 2007

மின் இயற்றி( generator) மின்சாரத்தை உருவாக்குகிற்தா?







இந்த படம் ஒரு ஜெனரேட்டருடன் இனைந்த மின் விளக்கை காட்டுகிறது.



மின் இயற்றி( generator) மின்சாரத்தை உருவாக்குகிற்தா?



இதுக்கு பதில் சொல்லனும்னா, உங்க வீடல இருக்கிற குண்டு மின்விளக்கை எடுத்துக்குவோம்(Bulb). அந்த மின்விளக்கை இனைக்கும் கடத்தியில்(Wire) மின்னூட்டங்கள்(Electrons) உக்காந்துட்டு முன்னோக்கியும் பின்னாடியும் அலஞ்சிட்டு இருக்கும். படத்தைப் பார்க்கவும். அதுதான் AC அல்டர்நேட்டிங் கரண்ட்(இதுக்கு சரியான தமிழ் வார்த்தை இருந்தால் செல்லவும்) . அதே நேரத்தில் மின்கந்தப் புலத்தால்(Elecromagnetic field) உருவான மின்காந்த அலைகள்(Electro magnetic waves) வேகமாக கட்த்தியில் முன்னேரிச் செல்லும். இந்த அலையில் உள்ள சக்தியானது(Energy) முன்னும் பின்னும் அலையாது, ஆனால் அது கடத்தி வழியாக ஓடி மினியற்றியில் இருந்து விளக்கிற்கு பாயும்.



சரி, இப்ப இந்த கேள்விய நீங்களே கேட்டுப் பாருங்க: மின்னோட்டம் (current) தான் மின்சாரமா(electricicty)?,

அப்படியெனில் நாம் மின்சாரம் கடத்தியின் உள்ளெ உக்காந்து கொண்டு முன்னும் பின்னும் ஓடிகொண்டிருகிறது.

அடுத்து இந்த கோணத்தில் பாருங்கள் அதை ஒரு ஆற்றலின் வடிவாக? . மின்சார்ம் என்பதை மின்னாற்றலாக எடுத்துக் கொண்டால் அது முன்னும் பின்னும் அலைய முடியாது கடத்தியினுள்ளே, அதற்க்கு பதிலாக அது மின்காந்த புலத்தை தோற்றுவித்து முன்னோக்கி ஓடுகிறது.



ஆனால் மேலே சொன்ன இரண்டையும் ஒரெ நேரத்தில் செய்கிறதா? அப்படியெனில்



எது மின்சாரம்?

* முன்னும் பின்னும் அலையும் எலக்ட்ரான்களா?

இல்லை

*மிக வேகமா மின்காந்தபுல ஆற்றலா?

- புததகங்களில் தேடினால் முரனாண விளக்கங்கள்தான் உள்ளன.

யாராவது ஜெனரேட்டர் தான் மின்சாரதை உருவாக்குகிறதா என்றால்? மின்னியல் பற்றி நாம் தவறான கோனத்தில் இருக்கிரோம் என்று அர்த்தம்.



இதை நாம் தெளிவாக புரிந்து கொண்டால் மின்னியல் என்பது மிகஎளிதானதே.பொதுவாக மின்சாரம் என்பதை பலரும் எப்படிச் சொல்கின்றனர் என்பதைப் பார்ப்போம்....? அதுல எது சரினு நினக்கிறீர்களே அதை ஆழ்ந்து சிந்தியுங்கள். அதுல் ஒன்னுதான் சரி மற்ற எல்லாம் தவறு.விஞ்ஞானிகள், தினசரி வாழ்க்கையில், பள்ளி அறிவியல் புத்தகத்தில் எல்லாம் இந்த மின்சாரத்திற்கு கொடுக்கும் வரையறைகள் என்னனு பாக்கலாமா?

7 Comments:

said...

மிக மிக நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
இடையில் நிறுத்திவிடாமல் தொடருங்கள்.

எழுத்து/வாக்கியப் பிழைகள் அதிகம் இருக்கின்றன. புதிதாக கணினியில் தமிழில் எழுதுவதால் இருக்கலாம் என்று யூகிக்கிறேன். அதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

said...

என்ன எடுத்த உடனே அஸ்திவாரத்தை அசைக்கிறீர்கள்?
அப்ப நாங்க நினைத்துக்கொண்டிருந்ததெல்லாம் தப்பா?
போச்சுடா!!
மெமரியை, ரி பார்மட் பண்ணவேண்டும் போல..:-))

said...

Collapse comments


//பரி (Pari) said...
மிக மிக நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
இடையில் நிறுத்திவிடாமல் தொடருங்கள்.

எழுத்து/வாக்கியப் பிழைகள் அதிகம் இருக்கின்றன. புதிதாக கணினியில் தமிழில் எழுதுவதால் இருக்கலாம் என்று யூகிக்கிறேன். அதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். //

தங்கள் வாழ்த்துக்களுக்கும் வழிகாட்டுதலுக்கும் மிக்க நன்றி. எழுத்துப் பிழைகள் வராமல் இனி கவனமாகப் பதிக்கிறேன்.

said...

// வடுவூர் குமார் said...
என்ன எடுத்த உடனே அஸ்திவாரத்தை அசைக்கிறீர்கள்?
அப்ப நாங்க நினைத்துக்கொண்டிருந்ததெல்லாம் தப்பா?
போச்சுடா!!
மெமரியை, ரி பார்மட் பண்ணவேண்டும் போல..:-)) //

மின்னியலை சரியான முறையில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தவே இந்த முயற்ச்சி. புத்தகங்கள் மின்னியல் பற்றி தெளிவான விளக்கங்கள் தருவதில்லை. நமது மாணவர்களிடமும் தேடல் என்பது குறைவாகவே உள்ளது. மதிப்பெண் வாங்க படித்து படித்ததற்கு சம்பந்தம் இல்லாத ஒரு வேலையில் அமர்ந்து இப்படியே காலத்தை ஓட்டி விடுகிறேம். படித்தது எல்லாம் சரியா என திரும்ம்பி பார்க்கும் முயற்சி இது.

Anonymous said...

AC அல்டர்நேட்டிங் கரண்ட்(இதுக்கு சரியான தமிழ் வார்த்தை இருந்தால் செல்லவும்)

-- ஆடலோட்ட மின்னோட்டம்

Anonymous said...

அதுதான் AC அல்டர்நேட்டிங் கரண்ட்(இதுக்கு சரியான தமிழ் வார்த்தை இருந்தால் செல்லவும்) .

ஆடலோட்ட மின்னோட்டம்

said...

//Anonymous said...
அதுதான் AC அல்டர்நேட்டிங் கரண்ட்(இதுக்கு சரியான தமிழ் வார்த்தை இருந்தால் செல்லவும்) .

ஆடலோட்ட மின்னோட்டம்//

நன்றி நண்பரே