left Basic Electrical in மின்னியல் தமிழில்...!: மின்சாரத்தைச் சேமிக்க...-1

Tuesday, September 16, 2008

மின்சாரத்தைச் சேமிக்க...-1


மின்சாரம் சேமிப்பு:

இன்னைக்கு நமக்கு பெரிய பிரச்சினை மின் தட்டுப்பாடு. அரசினை இதற்க்கு குறைகூறும் போக்கை கைவிட்டு மின்சாரத்தைச் சேமிக்கும் முறைகளைக் கையாண்ட்டால் நல்லது. எதோ நம்மாலான சின்ன உதவியை இந்த நாட்டுக்கு செய்வதாக அமையும். வீட்டில் மின் சேமிப்பை எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசித்த பொழுது கிச்சனில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. இதோ சில யோசனைகள் , இதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சொல்லவில்லை, பின்பற்றினால் நன்றாக இருக்கும் :)

கிச்சனில் மின்சாரத்தைச் சேமிக்கும் முறைகள்:

குளிர்சாதனப்பெட்டி:Refrigerator:

ஒரு வீட்டில் வருடதிற்க்கு குளிர்சாதன உபயொக்கதால் 600-1200 கிலோவாட்-ஹவர் (kWh) மின்சாரம் உபயோகமாகிறது. இதில் மின் உபயோகத்தக் குறைக்க கீழே உள்ள வழிகளை பின்பற்றலாம்.
· உங்கள் குளிர்சாதனதின் வெப்பதினைஅ 37-40 F அளவில் இருக்குமாறு வைக்கவும்.
· அதிகமான பொருட்களை பெட்டியினுள் திணிக்க வேண்டாம், இதனால் உள்ளே காற்றோட்டம் சரியாக இருக்காது. சில நேரம் கதவினைச் சரியாக மூட இயலாமல் போய் மின்சாரம் வீணாகும்.
· குளிர்சாதனப் பெட்டியின் கதவில் காற்று புகாமல் இருக்க உபயோகிக்கபடும் கேஸ்கட்(gaskets) சரியாக இருக்கிறதா என்பதை மாதமொருமுறை சரிபார்க்கவும். அதன் திறனை இழந்து விட்டால் உடனடியாக மாற்ற வேண்டும்.
· திரவ உணவுகளை உள்ளே வைக்கும் போது மூடி போட்டு வைக்கவும், இல்லையெனில் அவை ஆவியாகி கம்ப்ரஸரின் வேலையை அதிகமாக்கி விடும்.
· சூடான உணவும் போருட்களை உள்ளே வைக்க கூடாது. ஆறவைத்த பின்னர்தான் உள்ளே வைக்க வேண்டும்.
· சமைக்கும் போது பக்கதுலதான் இருக்குனு கரிவேப்பிலைக்கு ஒரு முறை, கொத்தமல்லி இலை எடுக்க ஒருமுறை என திறந்து திறந்து மூட வேண்டாம், நால்ல யோசிச்சி இன்னிக்கு சமைக்கப் போறதுக்கு இதேல்லாம் வேணும்னு முடிவு செய்து ஒரே முறை திறந்து தேவையானவற்றை எடுதுவிட்டு மூடிவிட வேண்டும்.
· மின்ச்சாரதைச் சேமிக்க பவர் சேவர் சுவிட்ச் உங்களது குளிச்சாதனப் பெட்டியில் இருந்தால் அதை உபயோகப் படுத்தவும்.
· வீட்டில் நேரடியாக சூரிய வெளிச்சம் படும் இடத்தில் குளிர்ச்சதனப் பெட்டியை வைக்க கூடாது.


குளிர்சாதனம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:

· மின் உபயோகதினை 40% குறைக்க ஒருவழி வரும் தீபாவளிக்கு எக்சேஞ்ச் ஆபரில் பழைய குளிர்சாதனத்தைக் கடாசிவிட்டு புதுசுக்கு மாறிடுங்க.

· 165 லிட்டடர் வேனுமா, இல்லை 200 லி, சிங்கிள் டோர், டபுள் டோர், எதுவானாலும் உங்கள் தேவையக்கு சரியான அளவில் வாங்க வேண்டும். சிறிதாக வாங்கி விட்டு, உள்ளே பொருட்களைத் திணிக்க வேண்டாம்.

· மின்சேமிப்பு முறைகள் உள்ளதாவும், எனர்ஜி ஸ்டார் உள்ளதாகவும் பார்த்து வாங்குங்கள்.

அடுத்து ஓவனில் எந்த முறைகளைக் கையாள்வது எனப் பார்க்கலாம்.
நன்றி:-http://www.eei.org/industry_issues/retail_services_and_delivery/wise_energy_use/how_to_save_electricity_in_your_home/kitchen_tips.htm

16 Comments:

முரளிகண்ணன் said...

very useful post

rapp said...

நல்லத் தகவல்கள். நன்றிங்க

Viji said...

//முரளிகண்ணன் said...
very useful post
//
//rapp said...
நல்லத் தகவல்கள். நன்றிங்க
//

Thanks Murali& Rapp

யூர்கன் க்ருகியர் said...

நன்றி

Anonymous said...

அவசியமான தகவல்கள்ள்

வான்முகிலன் said...

மின்சாரமே இல்லேங்ணா. அப்புறம் எங்குட்டு சேமிக்றதுங்ணா???????

Viji said...

//சின்ன அம்மிணி said...
அவசியமான தகவல்கள்ள்//

நன்றி உங்கள் வருகைக்கு.

Viji said...

// வான்முகிலன் said...
மின்சாரமே இல்லேங்ணா. அப்புறம் எங்குட்டு சேமிக்றதுங்ணா???????//

ம்ம்... இருக்கிறபோதே சேமிக்கிற பழக்கத்த ஆரம்பிச்ருந்தா இப்ப கொஞ்சம் கஷ்டம் குறஞ்சிருக்குமுங்க.

பழமைபேசி said...

நல்ல தகவல்! நன்றிங்க!!

ப்ரியமுடன் வசந்த் said...

good post...

☀நான் ஆதவன்☀ said...

அன்பரே உங்க மெயில ஐடி தரமுடியுமா? எலக்டிரிகல்ல சில சந்தேகங்கள் இருக்கிறது. என் மெயில் ஐடி aadhavanssk@gmail.com

R.Gopi said...

மிக மிக அருமையான பதிவு விஜி..

நிறைய தெரியாத விஷயங்களை உள்ளடக்கிய இந்த பதிவு நிறைய பெயர்களை சென்றடைய வேண்டும் என்பதே என் அவா...

இது போன்ற “விஷயங்கள்” அடங்கிய பதிவுகளுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு விஜி...

மிக்க நன்றி...

கோபிநாத் said...

நல்ல பதிவு ;))

தொடருங்கள் ;)

Viji said...

// R.Gopi said...
மிக மிக அருமையான பதிவு விஜி..

நிறைய தெரியாத விஷயங்களை உள்ளடக்கிய இந்த பதிவு நிறைய பெயர்களை சென்றடைய வேண்டும் என்பதே என் அவா...

இது போன்ற “விஷயங்கள்” அடங்கிய பதிவுகளுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு விஜி...

மிக்க நன்றி...//

நன்றி உங்கள் வருகைக்கும் , ஆதரவுக்கும் .

Viji said...

//கோபிநாத் said...
நல்ல பதிவு ;))

தொடருங்கள் ;)//

நன்றி கோபிநாத்.

செல்லதுரை said...

மின்சார தட்டுப்பாடு, மின்சார தடை இது போன்ற இன்னல்களை கடந்து வெற்றிகரமாக சேவை செய்யும் எங்கள் பிசினஸ் பற்றியும் எழுதலாமே...

(அகில இந்திய பெட்ரோமாக்ஸ் லைட் உரிமையாளர்கள் சங்கம்)