left Basic Electrical in மின்னியல் தமிழில்...!: வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?-2

Thursday, September 11, 2008

வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?-2



முதலில் வாட் மற்றும் ஆம்பியர்.
மின்சாரம் பற்றித் தெரிந்து கொள்வதற்க்கு முதல் இதனை தண்ணீருடன் ஒப்பிடலாம். மேல்நிலைத்தொட்டியில் சேகரிக்கப் பட்டிருக்கும் தண்ணீர் எப்படி குழாய்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப் படுகிறது எனப் புரிந்து கொண்டால்( எந்த ஊருல குழாய்ல தண்ணி வருது வெறும் காத்துதான் வருதுனு சொன்னீங்கனா அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது) , அதை போலவே மின் வினியோகம் எப்படி நடக்கிறது என எளிதாக விளக்கம் கொடுக்கலாம்.
முதலில் வாட் மற்றும் ஆம்பியர் பற்றி பார்ப்போம். இரண்டும் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தும் ஏனேன்றால் இரண்டும் ஒரு பொருளின் ஓட்ட வீதத்தை(Flow rate) குறிப்பவை, ஆனால் இவை குழப்பத்தை விளைவிக்க காரணம் எந்த பொருள் கம்பிகளின் வழியே ஓடுகிறது என்று சரியாக விளங்கிக் கொள்ளாமல்( உண்மையில் பாட புத்தகங்கள் இதை சரியானமுறையில் விளக்குவதில்லை) அதன் ஓட்டவீதத்தை பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்பதே ஆகும். தண்ணீர் என்றால் என்னவென்றே தெரியாமல் தண்ணீரின் ஓட்டத்தை பற்றி படித்தால் விளங்குமா??!
மின்சாரம் (current) என்பது ஒரு பொருள் அல்ல, ஒரு பொருளின் ஓட்டத்தை மின்சாரம் என்கிறோம். மின்சாரம் பாய்கிறது என்று சொல்லும் போது எந்த பொருள் கடத்தியில் ஓடுகிறது?. அதன் பெயர் “மின்னூட்டம்”(Charge).
ஆம்ப்பியர்:
கடத்தியின் வழியே எது பாய்கிறது?. அதற்க்குப் பல பெயர்கள் உண்டு.
· மின் மூலக்கூறுகள்
· எலக்ட்ரான்கள்
· மின்னூட்டம்
· எலக்ட்ரான் திரவம்
மின்னூட்டங்கள் “கூலும்”(Coulomb) என்ற அலகால்(unit) அளக்கப் படுகிறது. ஆம்ப்பியர் என்றால் “ ஒரு கூலும் மின்னூட்டங்கள் ஒரு வினாடியில் பாய்கிறது” என்று பொருள். மின்னோட்ட்த்தை நீரோட்டதுடன் ஒப்பிட்டால் ஒரு லிட்டர் தண்ணீர் என்று சொல்வோமே அது போல ஒரு கூலும் மின்னூட்டம் எனச் சொல்லலாம். ஒரு வினாடி நேரத்தில் குழாய்வழியே ஒரு லிட்டர் தண்ணீர் ஓடுகிறது என்றால் அதன் ஓட்ட வீதத்தை (flow rate) ஒருலிட்டர்/வினாடி என அளக்கலாம்,இதை பொதுவாக gpm(gallons per minute) எனக் குறிப்பிடுகின்றனர். இதோ போல் ஒரு கடத்தியில் (conductor or wire) ஒரு வினாடி நேரத்தில் ஒரு கூலும் மின்னூட்டங்கள் பாய்ந்து சென்றால் அதில் ஒரு “ஆம்பியர்” மின்சாரம் செல்கிறது எனக் குறிப்பிடலாம்.
ஒகேய், வாட் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாமா?

9 Comments:

முரளிகண்ணன் said...

இப்படியெல்லம் சொல்லிக் கொடுத்திருந்தா நானும் நல்லா படிச்சிருப்பேன்

Tech Shankar said...

Enakke puriyudhu. thalaivaa..

Viji said...

//முரளிகண்ணன் said...
இப்படியெல்லம் சொல்லிக் கொடுத்திருந்தா நானும் நல்லா படிச்சிருப்பேன்//

வாங்க முரளி சார். எனக்கும் இப்படி யாரவது சொல்லிக் குடுத்திருந்தா இங்க எழுதிட்டு இருக்க மாட்டேன். ஹி ஹி ஹி :)

Viji said...

//தமிழ்நெஞ்சம் said...
Enakke puriyudhu. thalaivaa..//

தேங்கஸ் தலைவா. ஏதோ எழுதரேன்னு நினச்சேன்.
உங்களுக்கும் புரியுதுனா ர்ரொம்ம்ப சந்தோசம்.

ரவி said...

good. please give me more :)))

Viji said...

//செந்தழல் ரவி said...
good. please give me more :)))//

Thank u. sure i try 2 write more.

கோவி.கண்ணன் said...

பதிவுலகில் முதன் முதலாக ஒரு மின்சார கண்ணா....

:)

நல்ல முயற்சி, மின்னியில் தமிழில் படித்து தெரிந்து கொள்ள நினைப்போருக்கு உங்கள் எழுத்துகள் பயன்படும்

Viji said...

//கோவி.கண்ணன் said...

பதிவுலகில் முதன் முதலாக ஒரு மின்சார கண்ணா....

:)

நல்ல முயற்சி, மின்னியில் தமிழில் படித்து தெரிந்து கொள்ள நினைப்போருக்கு உங்கள் எழுத்துகள் பயன்படும்//
நன்றி கண்ணன் சார்

Unknown said...

super sir