வாட்:
“வாட்”(Watt)- இதுவும் மின்னியல் பொறுத்தவரை குழப்பமான ஒன்று, சரியாகப் புரிந்து கொண்டால் போதும். 40 வாட்ஸ் பல்பு, 60 வாட்ஸ் பல்புனு சொல்லுவாங்க, 1/2 ஹெச்பி(hp) மோட்டார்னு சொல்லுவாங்க. இதேல்லாம் மின்னாற்றலினை(electrical energy)க் குறிக்கும் அளவுகளே. மின்னுட்டங்கள் பாய்வதை மின்சாரம் என்கிறோம், இதன் அலகு ஆம்பியர் எனப் பார்த்தோம். இப்படி ஒன்றைச் சொல்லியதையே மறந்து விட்டு நமது பாடப்புத்தங்கள் மின்னூட்டங்கள் கடத்தியின் வழியே பாய்வதால் மின்னாற்றல் பாய்கிறது, இது வாட் என அளக்கப்படுகிறது என்று விளக்கம் கொடுப்பார்கள். 2 மார்க் வாங்கினாப் போதும்னு நினைக்கிற நம்மாளும் இதை மனப்பாடம் பண்ணி எழுதிட்டு போய்ட்டே இருப்பான். இத புரிஞ்சிக்கனும்னு முயற்சி பன்றவன் பைத்தியம் ஆகிடுவான். ஏன்னா கொஞ்ச நேரம் முன்னாடி மின்னூட்டம் ஓடினா அதுக்கு மின்சாரம்னு பேருனு படிச்சிட்டு, திரும்ப அப்படி ஓடினா அதுக்கு இன்னொரு பேரு, இன்னொரு அலகுனு சொன்னா எது சரி? எது தப்புனு குழப்பம்தான் மிஞ்சும்.
வாட் என்பது மின்னாற்றல் பாய்வு வீதத்(flow rate)தை குறிக்கிறது. ஆனால் இங்கே பாய்வது என்ன? ஆற்றல். “வாட்” என்பது ஒரு வினாடி நேரத்தில் பாயும் மின்னாற்றலைக் குறிக்கும் ஒரு ஆடம்பரமான வார்த்தை(fancy word). அப்படியெனில் மின்னாற்றலின் அளவு என்ன?. எந்த வகையான ஆற்றலும் ஜூல்(Joule) எனற அலகால் அளக்கப் படுகிறது. ஒரு ஜூல் மின்னாற்றலை ஒரிடதிலிருந்து இன்னோரு இடத்திற்ற்கு மின்கடத்தியின் வழியாக பாயச் செய்யலாம். நீங்கள் ஒரு ஜூல் மின்னாறலை ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு மின்கடத்திக்யின் வழியே எடுத்துச் சென்றால், இந்த ஆற்றல் பாய்வு வீதம் 1ஜூல்/வினாடி, “ ஒரு ஜூல் /வினாடி என்பது ஒரு வாட்”
Monday, September 15, 2008
வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?-3
Posted by
Viji
at
6:03 am
Subscribe to:
Post Comments (Atom)
11 Comments:
nice. continue
// முரளிகண்ணன் said...
nice. continue
//
நன்றி முரளி சார். உங்களைப் போன்றவர்களின் உற்சாகம் தொடர்ந்து எழுத வைக்கிறது.
நல்ல பயனுள்ள பதிவு. மின்னியலை எளிய தமிழில் தரும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
//பின்னூட்டம் பெரியசாமி.. said...
நல்ல பயனுள்ள பதிவு. மின்னியலை எளிய தமிழில் தரும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.//
நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
தமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்
இந்தியாவின் முதல், ஆசியாவின் நான்காவது தரவுத்தாள் தளம்:
தமிழ் தரவுத்தாள் தளம்
Tamil Electronics Datasheets
http://www.tamildata.co.cc
மிக்க நன்று.
தொடர்ந்திடட்டும் உங்கள் இனிய பணி
மிக்க நன்று.
தொடர்க உங்கள் இனிய பணி
மிக்க நன்று.
தொடர்க உங்கள் இனிய பணி
Very nice&useful
நல்ல தகவல் நன்றி
நன்றி
Post a Comment