மின்சாரம் இன்னைக்கு ஒரு முக்கியமான ஒன்றாகிவிட்டது வாழிக்கையில, அது இல்லாம அன்றாட வாழ்க்கைய ஓட்றது கொஞ்சம் கஸ்டம் தான். ஆனா என்ன ஒரு சின்னதா ப்யூஸ் போனாக் கூட , அத மாத்த யோசிக்கிற மக்கள் நிறையப் பேரு இருக்காங்க, காரணம் அதை பற்றிய பயம், சரியான புரிதல் இல்லாமைனு சொல்லலாம். பயப்படும் படியானா, இல்ல தொட்ட உடனே ஆளைக் காலி [பண்ணிடும் பயங்கரமான ஒன்னு இல்ல அது,
எலக்ட்ரிசிட்டினா என்ன? அதை எப்படிக் கையாளனும்னு தெரிஞ்சுகிட்டா சின்ன சின்ன வேலைகளுக்கேல்லாம் எலக்ட்ரீசியனத் தேடி ஓட வேண்டியதில்லை, அதே போல தெரியமல் ஏற்படும் மின் விபத்துகளையும் தவிர்க்கலாம்.
எலக்ரிசிட்டினா (electricity) என்ன?
ரொம்ப எலக்ட்ரான், புரொட்டான் அப்படினு எல்லாம் குழப்ப போறதில்ல இப்போ, அத பத்தி அப்புறமா பார்ப்போம், ஒரு எலக்ட்ரிக்கல் சிஸ்டதுல பல பகுதிகள் இருக்கு, ஹைட்ரோ சிஸ்டம் எடுத்துகிட்டா பெரிய டேம் ல ஆடம்பிச்சு, ஜெனரேட்டர், டிரான்ஸ்பார்மர், சப்ஸ்டேசன், டிரான்ஸ்மிசன் லைன்னு பெரிய பார்ட்ஸ்ல இருந்து உங்க வீட்டு சுட்சு வரைக்கும் லாஜிலா இனைக்கபட்ட ஒரு அமைப்பு அது.
இந்த எலக்ட்ரிக்கல் ரிப்பேர் அப்படிஙகறதுல ஹவுஸ் வயரிங்க் பத்தி கொஞ்சம் விரிவாவும் , அதுக்கு கடைக்பிடிக்க வேண்டிய விதிகள் நடைமுறைகள் பத்தி கொஞ்சம் விரிவா பின்னர் பார்கலாம்....
இன்னிக்கு டிப்ஸ்:-
ப்யுஸ்(fuse) போயிடுச்சுனா மாத்தும் போது:-
இப்போ பெரும்பாலும் சர்க்யுட் பிரேக்கர் தான் உபயோகிக்றாங்க எல்லோரும். அதுல இருக்கும் சுவிட்ச திரும்ப மேல தள்ளிவிட்டாப் போதும். கீழ இருக்கும் படத்த பாருங்க.
இதில்லாமா பழைய டைப் ப்யூசா இருந்தா கொஞ்சம் கவனமா இருக்கனும்.
ப்யூஸ் மாற்றும் போது
ஈரமான தரையில் நிக்க கூடாது
காலில் ரப்பர் செருப்பு அணிந்து கொண்டு மாற்றுவது நல்லது.
எப்படி மாத்தனும்ன்னு அடுத்த போஸ்ட்ல பார்க்கலாம்----- தொடரும்.
Sunday, September 12, 2010
The complete idiots guide for electrical repair-1
Posted by Viji at 12:27 am 5 comments
Tuesday, September 07, 2010
The complete idiots guide for electrical repair
ஹலோ பிரண்ட்ஸ் ,
வணக்கம் , எல்லோரும் நலமா? மின்னியல தமிழ்ல எழுத ஆரம்பிச்சி அப்படியே பாதில நிக்குது, ம்ம்ம் நேரம் காலம் வரட்டும் அத தொடரலாம்.
இப்பொ வேற ஒரு சின்ன முயர்ச்சி. ”The complete idiots guide for electrical repair” இத பத்தி எழுதலாம்னு
தலைப்பே சொல்லிடுது இது புத்திசாலிங்களுக்கு இல்ல, அதால புத்திசாலிங்க, அதி புத்திசாலிங்க கண்டுக்காதீங்க.
இத படிச்ச உடனே ரிப்பேர் செய்யலாம்னு நினைக்க வேண்டாம், எதோ எலக்கிட்ரிக்கல் ரிப்பேர் பத்தி கொஞ்சமா தெரிஞ்சுக்கலாம்ங்க அவ்ளோதான்.
சொந்த சரக்கேல்லாம் இல்லீங்க, யாரோ எழுதனது தான் கட்,காபி,பேஸ்ட் சில நேரம் ட்ரான்ஸ்லேட் ஆவ்ளோதாங்க. என்ன ஆரபிக்கலாமா?
Posted by Viji at 12:06 pm 0 comments
Tuesday, September 16, 2008
மின்சாரத்தைச் சேமிக்க...-1
மின்சாரம் சேமிப்பு:
கிச்சனில் மின்சாரத்தைச் சேமிக்கும் முறைகள்:
குளிர்சாதனப்பெட்டி:Refrigerator:
ஒரு வீட்டில் வருடதிற்க்கு குளிர்சாதன உபயொக்கதால் 600-1200 கிலோவாட்-ஹவர் (kWh) மின்சாரம் உபயோகமாகிறது. இதில் மின் உபயோகத்தக் குறைக்க கீழே உள்ள வழிகளை பின்பற்றலாம்.
· உங்கள் குளிர்சாதனதின் வெப்பதினைஅ 37-40 F அளவில் இருக்குமாறு வைக்கவும்.
· அதிகமான பொருட்களை பெட்டியினுள் திணிக்க வேண்டாம், இதனால் உள்ளே காற்றோட்டம் சரியாக இருக்காது. சில நேரம் கதவினைச் சரியாக மூட இயலாமல் போய் மின்சாரம் வீணாகும்.
· குளிர்சாதனப் பெட்டியின் கதவில் காற்று புகாமல் இருக்க உபயோகிக்கபடும் கேஸ்கட்(gaskets) சரியாக இருக்கிறதா என்பதை மாதமொருமுறை சரிபார்க்கவும். அதன் திறனை இழந்து விட்டால் உடனடியாக மாற்ற வேண்டும்.
· திரவ உணவுகளை உள்ளே வைக்கும் போது மூடி போட்டு வைக்கவும், இல்லையெனில் அவை ஆவியாகி கம்ப்ரஸரின் வேலையை அதிகமாக்கி விடும்.
· சூடான உணவும் போருட்களை உள்ளே வைக்க கூடாது. ஆறவைத்த பின்னர்தான் உள்ளே வைக்க வேண்டும்.
· சமைக்கும் போது பக்கதுலதான் இருக்குனு கரிவேப்பிலைக்கு ஒரு முறை, கொத்தமல்லி இலை எடுக்க ஒருமுறை என திறந்து திறந்து மூட வேண்டாம், நால்ல யோசிச்சி இன்னிக்கு சமைக்கப் போறதுக்கு இதேல்லாம் வேணும்னு முடிவு செய்து ஒரே முறை திறந்து தேவையானவற்றை எடுதுவிட்டு மூடிவிட வேண்டும்.
· மின்ச்சாரதைச் சேமிக்க பவர் சேவர் சுவிட்ச் உங்களது குளிச்சாதனப் பெட்டியில் இருந்தால் அதை உபயோகப் படுத்தவும்.
· வீட்டில் நேரடியாக சூரிய வெளிச்சம் படும் இடத்தில் குளிர்ச்சதனப் பெட்டியை வைக்க கூடாது.
குளிர்சாதனம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
· மின் உபயோகதினை 40% குறைக்க ஒருவழி வரும் தீபாவளிக்கு எக்சேஞ்ச் ஆபரில் பழைய குளிர்சாதனத்தைக் கடாசிவிட்டு புதுசுக்கு மாறிடுங்க.
· 165 லிட்டடர் வேனுமா, இல்லை 200 லி, சிங்கிள் டோர், டபுள் டோர், எதுவானாலும் உங்கள் தேவையக்கு சரியான அளவில் வாங்க வேண்டும். சிறிதாக வாங்கி விட்டு, உள்ளே பொருட்களைத் திணிக்க வேண்டாம்.
· மின்சேமிப்பு முறைகள் உள்ளதாவும், எனர்ஜி ஸ்டார் உள்ளதாகவும் பார்த்து வாங்குங்கள்.
அடுத்து ஓவனில் எந்த முறைகளைக் கையாள்வது எனப் பார்க்கலாம்.
நன்றி:-http://www.eei.org/industry_issues/retail_services_and_delivery/wise_energy_use/how_to_save_electricity_in_your_home/kitchen_tips.htm
Posted by Viji at 2:04 am 16 comments
Labels: கிச்சன், மின்சாரம் சேமிப்பு
Monday, September 15, 2008
வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?-3
வாட்:
“வாட்”(Watt)- இதுவும் மின்னியல் பொறுத்தவரை குழப்பமான ஒன்று, சரியாகப் புரிந்து கொண்டால் போதும். 40 வாட்ஸ் பல்பு, 60 வாட்ஸ் பல்புனு சொல்லுவாங்க, 1/2 ஹெச்பி(hp) மோட்டார்னு சொல்லுவாங்க. இதேல்லாம் மின்னாற்றலினை(electrical energy)க் குறிக்கும் அளவுகளே. மின்னுட்டங்கள் பாய்வதை மின்சாரம் என்கிறோம், இதன் அலகு ஆம்பியர் எனப் பார்த்தோம். இப்படி ஒன்றைச் சொல்லியதையே மறந்து விட்டு நமது பாடப்புத்தங்கள் மின்னூட்டங்கள் கடத்தியின் வழியே பாய்வதால் மின்னாற்றல் பாய்கிறது, இது வாட் என அளக்கப்படுகிறது என்று விளக்கம் கொடுப்பார்கள். 2 மார்க் வாங்கினாப் போதும்னு நினைக்கிற நம்மாளும் இதை மனப்பாடம் பண்ணி எழுதிட்டு போய்ட்டே இருப்பான். இத புரிஞ்சிக்கனும்னு முயற்சி பன்றவன் பைத்தியம் ஆகிடுவான். ஏன்னா கொஞ்ச நேரம் முன்னாடி மின்னூட்டம் ஓடினா அதுக்கு மின்சாரம்னு பேருனு படிச்சிட்டு, திரும்ப அப்படி ஓடினா அதுக்கு இன்னொரு பேரு, இன்னொரு அலகுனு சொன்னா எது சரி? எது தப்புனு குழப்பம்தான் மிஞ்சும்.
வாட் என்பது மின்னாற்றல் பாய்வு வீதத்(flow rate)தை குறிக்கிறது. ஆனால் இங்கே பாய்வது என்ன? ஆற்றல். “வாட்” என்பது ஒரு வினாடி நேரத்தில் பாயும் மின்னாற்றலைக் குறிக்கும் ஒரு ஆடம்பரமான வார்த்தை(fancy word). அப்படியெனில் மின்னாற்றலின் அளவு என்ன?. எந்த வகையான ஆற்றலும் ஜூல்(Joule) எனற அலகால் அளக்கப் படுகிறது. ஒரு ஜூல் மின்னாற்றலை ஒரிடதிலிருந்து இன்னோரு இடத்திற்ற்கு மின்கடத்தியின் வழியாக பாயச் செய்யலாம். நீங்கள் ஒரு ஜூல் மின்னாறலை ஒவ்வொரு வினாடிக்கும் ஒரு மின்கடத்திக்யின் வழியே எடுத்துச் சென்றால், இந்த ஆற்றல் பாய்வு வீதம் 1ஜூல்/வினாடி, “ ஒரு ஜூல் /வினாடி என்பது ஒரு வாட்”
Posted by Viji at 6:03 am 11 comments
Thursday, September 11, 2008
வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?-2
மின்சாரம் பற்றித் தெரிந்து கொள்வதற்க்கு முதல் இதனை தண்ணீருடன் ஒப்பிடலாம். மேல்நிலைத்தொட்டியில் சேகரிக்கப் பட்டிருக்கும் தண்ணீர் எப்படி குழாய்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப் படுகிறது எனப் புரிந்து கொண்டால்( எந்த ஊருல குழாய்ல தண்ணி வருது வெறும் காத்துதான் வருதுனு சொன்னீங்கனா அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது) , அதை போலவே மின் வினியோகம் எப்படி நடக்கிறது என எளிதாக விளக்கம் கொடுக்கலாம்.
முதலில் வாட் மற்றும் ஆம்பியர் பற்றி பார்ப்போம். இரண்டும் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தும் ஏனேன்றால் இரண்டும் ஒரு பொருளின் ஓட்ட வீதத்தை(Flow rate) குறிப்பவை, ஆனால் இவை குழப்பத்தை விளைவிக்க காரணம் எந்த பொருள் கம்பிகளின் வழியே ஓடுகிறது என்று சரியாக விளங்கிக் கொள்ளாமல்( உண்மையில் பாட புத்தகங்கள் இதை சரியானமுறையில் விளக்குவதில்லை) அதன் ஓட்டவீதத்தை பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்பதே ஆகும். தண்ணீர் என்றால் என்னவென்றே தெரியாமல் தண்ணீரின் ஓட்டத்தை பற்றி படித்தால் விளங்குமா??!
மின்சாரம் (current) என்பது ஒரு பொருள் அல்ல, ஒரு பொருளின் ஓட்டத்தை மின்சாரம் என்கிறோம். மின்சாரம் பாய்கிறது என்று சொல்லும் போது எந்த பொருள் கடத்தியில் ஓடுகிறது?. அதன் பெயர் “மின்னூட்டம்”(Charge).
ஆம்ப்பியர்:
கடத்தியின் வழியே எது பாய்கிறது?. அதற்க்குப் பல பெயர்கள் உண்டு.
· மின் மூலக்கூறுகள்
· எலக்ட்ரான்கள்
· மின்னூட்டம்
· எலக்ட்ரான் திரவம்
மின்னூட்டங்கள் “கூலும்”(Coulomb) என்ற அலகால்(unit) அளக்கப் படுகிறது. ஆம்ப்பியர் என்றால் “ ஒரு கூலும் மின்னூட்டங்கள் ஒரு வினாடியில் பாய்கிறது” என்று பொருள். மின்னோட்ட்த்தை நீரோட்டதுடன் ஒப்பிட்டால் ஒரு லிட்டர் தண்ணீர் என்று சொல்வோமே அது போல ஒரு கூலும் மின்னூட்டம் எனச் சொல்லலாம். ஒரு வினாடி நேரத்தில் குழாய்வழியே ஒரு லிட்டர் தண்ணீர் ஓடுகிறது என்றால் அதன் ஓட்ட வீதத்தை (flow rate) ஒருலிட்டர்/வினாடி என அளக்கலாம்,இதை பொதுவாக gpm(gallons per minute) எனக் குறிப்பிடுகின்றனர். இதோ போல் ஒரு கடத்தியில் (conductor or wire) ஒரு வினாடி நேரத்தில் ஒரு கூலும் மின்னூட்டங்கள் பாய்ந்து சென்றால் அதில் ஒரு “ஆம்பியர்” மின்சாரம் செல்கிறது எனக் குறிப்பிடலாம்.
ஒகேய், வாட் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாமா?
Posted by Viji at 11:03 pm 9 comments
Labels: மின்னியல், வாட் ஆம்பியர்
Tuesday, September 09, 2008
வாட், ஓம், ஆம்பியர், வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?
இதோ ஒரு சிம்பிளான பதில்:
மின் கடதிகள் எப்பொழுதும் நகர்ந்து கொண்டிருக்கும் மின்மூலக்கூறுகளால்(movable charges) ஆனது. மின்னொட்டம்(current) என்பது இந்த மின் மூலகூறுகள் ஓடுவதால் ஏற்படுவது. மின்னழுத்தம்(வோல்ட்) இந்த ஒத்த மின்மூலக்கூறுகளை ஒரிடதிலிருந்து இன்னொரு இடதிற்க்கு தள்ளும் வேலையைச் செய்கிறது. ஒவ்வொரு மின்கடதியும்(conductor) ஒரு குறிப்பிட்ட்ட அளவு தடையை இந்த மின்மூலக்கூறுகளின் ஓட்டதிற்க்கு அளிக்கிறது. இந்த தடையை(Resistance) மீறி மின்னூட்டங்கள்(charges) நகர்வதால் கடத்தியில் வெப்பம் உண்டாகிறது.
எவ்வளவு மின்மூலக்கூறுகள் ஒரு நொடியில் நகர்கின்றன எனப்தை ஆம்பியர்(Amepre என்ற அலகால் அளக்கிறோம். அந்த நேரத்தில் பரிமாறப்படும் மின்சக்தியானது வாட்(Watt) என்றும், மின்தடை ஓம் (ohm) என்றும் அளக்கபடுகிறது. ஆம்ப்பியர், வோல்ட், வாட், ஓம் ம் சிம்ப்பிள்த்னே. இன்னும் கொஞ்சம் விளக்கமா பார்க்கலாமா?
Posted by Viji at 1:13 am 7 comments
Sunday, August 12, 2007
கிர்ச்சாப்'ஸ் விதி (KVL, KCL)- உங்களால முடியுமா?
கே வி எல், கே சி எல்:
எலக்ட்ரிகல் எஞ்ஜினியரிங் படிச்ச எல்லாருக்கும் அடிப்படையா தெரிய வேண்டிய முக்கியமான விதி இது ரெண்டும் தான். அதாவது ஒரு மின் சுற்றுல எவ்வ்வளவு மின்சாரம் பாயுது, எவ்வளவு மின்னழுத்தம் இருக்குனு கண்டுபிடிக்க இந்த விதிகள உதவியா இருக்கு. முதலில் அந்த விதி என்ன சொல்லுதுனு பாக்கலாம்
Kirchoff's Current Law (KCL):
At every node, the sum of all currents entering a node must equal zero.
Kirchoff's Voltage Law (KVL):
The voltage law says that the sum of voltages around every closed loop in the circuit must equal zero.
என்ன திடீர்னு இங்கிலீஸ்ல பீட்டருனு பாக்கறீங்களா, இந்த விதிகள இங்கிலீஸ்ல்ல சொல்றது சுலபம். ஓகே என்ன இதுல சொல்லி இருக்காங்க? முதல் விதியான மின்னோட்ட விதி ஒரு மின் சுற்றில்(Electric Circuit) உள்ள சந்திப்பில் உள்ளெ வரும் மின்னொட்டத்தின் கூட்டுத்தோகையானது வெளியே செல்லும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகைக்கு சமம்.
இரண்டாவது விதி என்ன் சொல்லுதுனா ஒரு முழுமையான மின்சுற்றில் மினழுத்தங்களின் (Voltages)கூட்டுத்தொகை பூஜ்ஜியத்துக்கு சமம்.
சந்திப்புனா(junction node) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கடத்திகளின் இனைப்பு புள்ளி. okey. இப்ப ஒரு மின் சுற்ற சால்வ் பண்ணனும் இந்த விதிகள பயன் படுத்தி உங்களால முடியுமானு கொஞ்சம் பாருங்களே.......
*
*
*
* *
***
***
* *
*****
**** * * *
**** *****
***********
*
*
*
* *
***
***
* *
*****
**** * * *
**** *****
***********
*
*
*
* *
***
***
* *
*****
**** * * *
**** *****
***********
*
*
*
* *
***
***
* *
*****
**** * * *
**** *****
***********
* இதோ முதல் சர்க்கியூட் 1:
அடுத்தது...
யாராவது EEE படிச்சவங்க இருக்கிங்களா? உங்களால இத சால்வ் பண்ண முடியுமா? என்ன மக்கா இத டெக்னிக்கல மொக்க பதிவுல சேத்துக்கலாமா?
Posted by Viji at 3:05 pm 8 comments
Labels: மொக்கை.